Header Ads

மலச்சிக்கல் தீர பல எளிய யோசனைகள்(குழந்தைகளுக்கும்) Malachikkal neenga paati vaithiyam

Constipation and Diarrhea
மலச்சிக்கல்
tamil simple ideas and tips for solutions to constipation. malasikkal neenga marunthu அநேக பெற்றோர்கள் தங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை தாங்கள் எதிர்பார்ப்பதைப்போல அடிக்கடி மலங்கழிக்கவில்லை என்றால் அவனுக்கு மலச்சிக்கல் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆயினும், உங்கள் குழந்தை எவ்வளவு அடிக்கடி மலங்கழிக்கிறான் என்பதைப் பொறுத்து மலச்சிக்கல் நிர்ணயிக்கப்படவில்லை. 

அதைவிட, குழந்தையின் மலம் இறுகி மலங்கழிக்கும்போது வலி அல்லது இரத்தபோக்கை ஏற்படுத்தும்போது, மலச்சிக்கல் உண்டாயிருக்கும். மலங்கழிக்கும்போது குழந்தை முனகலாம் அல்லது முழுப்பலத்தைப் பிரயோகிக்கலாம். மலச்சிக்கலுக்கான வேறு சில சாதாரண அறிகுறிகள் பின்வருமாறு:
இறுகிய மலம் கழிக்கும்போது குழந்தையின் ஆசன வாயிலில் வெடிப்புண்டானால். மலத்தில் இரத்தக் கோடுகள் காணப்படுதல்
அடிவயிற்றில் வலி
சினமடைதல்

malasikkal treatment in tamilதாய்ப்பால் மாத்திரம் ஊட்டப்படும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் அரிதாக மலச்சிக்கல் உண்டாகும். புட்டிப்பாலூட்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நோய் மிகவும் சாதாரணமானது.

புதிதாகப்பிறந்த உங்கள் குழந்தைக்கு மலங்கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், சைக்கிள் ஓட்டுவது போன்ற ரீதியில் அவனது கால்களை அசைக்கவும். சிலவேளைகளில் உங்கள் குழந்தை மலங்கழிப்பதற்கு உதவி செய்வதற்காக, தண்ணீர் அல்லது தண்ணீர் கலந்த புரூன் ஜூஸ் போன்ற வேறு சிகிச்சைகளும் தேவைப்படலாம். இந்தச் சிகிச்சைகள் பற்றி முதலில் உங்கள் மருத்துவருடன் கலந்து பேச வேண்டும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி நிகழாத மலங் கழித்தல்
பெரும்பாலும் புதிதாகப் பிறந்த குழந்தையின் வாழ்க்கையின் முதல் இரண்டு நாட்களில், கரும்பச்சை நிற அல்லது கறுப்பு நிற தார் போன்ற மெகோனியம் என்ற பொருள் மலமாகக் கழிக்கப்படும். ஏறக்குறைய மூன்று நாட்களளவில், புதிதாகப் பிறந்த குழந்தையின் மலங்கழித்தல், விசேஷமாக புதிதாகப் பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிப்பதாயிருந்தால், மேலும் அடிக்கடி நிகழவேண்டும். 

மலத்தின் நிறம் தானாகவே மெல்லிய கபில நிறம், மஞ்சள் கலந்த கபில நிறம், அல்லது மஞ்சள் நிறம் போன்ற நிறங்களுக்கு மாற்றமடையும். தன்மையில் மென்மையாக அல்லது தயிர் போல இருக்கும். முதல் இரு வாரங்களில், தாய்ப்பால் குடிக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் மலங்கழிப்பார்கள். புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் அதைவிடச் சிறிது குறைவான தடவைகள் மலங்கழிப்பார்கள். உங்கள் குழந்தையின் முதல் வருட வாழ்க்கையின் பிற்பகுதியில் புதிய உணவுகளை அறிமுகம் செய்யும்போது காலப்போக்கில் அவனது மலத்தின் நிறம் மற்றும் அமைப்பு மாறும்.  

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை இந்தச் சமயத்தில் அடிக்கடி மலங்கழிக்காவிட்டால் அது அவனுக்குப் போதியளவு உணவு கிடைக்கவில்லை என்பதன் ஒரு அறிகுறியாகவிருக்கலாம். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை அடிக்கடி மலம் கழிக்காவிட்டால், உங்கள் குழந்தையின் உணவூட்டப்படும் நேர அட்டவணை, ஈரமாக்கப்படும் டயபர்களின் எண்ணிக்கைகள், மற்றும் அவனின் எடை அதிகரிப்பதாகத் தோன்றினால் அவற்றையும் உங்கள் மருத்துவருடன் கலந்து பேச நிச்சயமாயிருங்கள்.

வயிற்றுப்போக்கு
புதிதாகப் பிறந்த குழந்தை மிகவும் நீர் போன்ற திரவவடிவில் மலங்கழித்தால், சில வேளைகளில் அதிகரிக்கப்பட்ட தடவைகள் மலங்கழித்தால் அல்லது வழக்கத்துக்கு மாறாக அதிக கனவளவில் மலங்கழித்தால், அவனுக்கு வயிற்றுப்போக்கு உண்டாகியிருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தும். மலத்தில் சளி காணப்படலாம். சிலவேளைகளில் வயிற்றுப்போக்குடன் வாந்தியும் காணப்படலாம்.

பெரும்பாலும் வயிற்றுப்போக்கு பக்டீரியா அல்லது வைரல் தொற்றுநோயினால் ஏற்படுகிறது. அசுத்தமான உணவு அல்லது தொற்றுநோயுள்ள மலத்துடன் தொடர்பு இருந்தால் புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் தொற்றுநோய் பரவலாம். வயிற்றுப்போக்கு வேறொரு விதமான வகை நோயினாலும் உண்டாகலாம். குறைவான சந்தர்ப்பங்களில், குழந்தையின் உணவில் ஒவ்வாமை அல்லது உணவை ஏற்றுக்கொள்ளாமை காரணமாக இருக்கலாம். அன்டிபையோடிக் மருந்துகளின் பக்கவிளைவினாலும் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

மருத்துவரை எப்போது சந்திக்கவேண்டும்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மலச்சிக்கல் மிகவும் மோசமான நோயாகலாம். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் மலங்கழித்தலில் ஏதாவது மாற்றத்தை நீங்கள் அவதானித்தால், அதை உங்கள் மருத்துவருக்குத் தெரிவிப்பதற்கு நிச்சமாயிருங்கள். உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்தால், பெரும்பாலும் அது ஒரு தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். வாய் உலர்தல், ஒரு நாளைக்கு ஆறுக்குக் குறைவான எண்ணிக்கையுள்ள டயபரை நனைத்தல், குழிவிழுந்த கண்கள், தாழ்ந்த தலை உச்சிக்குழி அல்லது தோல் உலர்தல் போன்ற உடல் வறட்சிக்கான அறிகுறிகளைக் காண்பித்தால், அது மிகவும் ஆபத்துக்கான அறிகுறியாக இருக்கலாம்.

24 மணி நேரங்களுக்கு உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நீர் போன்ற மலங்கழித்தல் இருந்தால், அல்லது பின்வரும் அறிகுறிகளுடன் வயிற்றுப்போக்கு இருந்தால், முடிந்தளவு விரைவாக மருத்துவரிடம் கொண்டு செல்லவும்:
உடல் நீர் வறட்சி
வாந்தி
காய்ச்சல்
மலத்துடன் இரத்தம் கழிதல்

வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளித்தல்
வயிற்றுப்போக்குக்கான சிகிச்சை அதன் காரணத்தைப் பொறுத்திருக்கிறது. சில சமயங்களில் உணவு முறையில் மாற்றம் செய்யப்படும், மற்றும் சில சமயங்களில் மருந்துகள் தேவைப்படும். மருத்துவரால் சிபாரிசு செய்யப்பட்டாலே அன்றி எந்த மருந்தையும் குழந்தைக்குக் கொடுக்கவேண்டாம்.

உங்கள் மருத்துவர் சிபாரிசு செய்யக்கூடிய சில குறிப்புகள் பின்வருமாறு:
புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிப்பதாக இருந்தால், வழக்கம்போல அவனுக்குத் தாய்ப்பால் கொடுக்கவும்.

உங்கள் குழந்தை வாந்தி எடுத்தால், அவனுக்கு சிறிய அளவில் உணவூட்டவும். ஆனால் மிகவும் அடிக்கடி அவ்வாறு செய்யவும். நீங்கள் தாய்ப்பாலூட்டுவதானால், ஒவ்வொரு தாய்ப்பாலூட்டலின்போதும் சிறிது நேரம் உங்கள் குழந்தையை மார்பில் வைக்கவும்.
உடல் நீர் வறட்சியிலிருந்து பாதுகாப்பதற்காக, உங்கள் குழந்தைக்கு பீடியலைற் போன்ற எலட்க்ரோலைட் கரைசல்களைத் தாய்ப்பாலூட்டுதலுக்கிடையில் கொடுக்கவேண்டி நேரிடலாம். இதற்கு மாறாக, எலட்க்ரோலைட் கரைசல்களை மாத்திரம் தாய்ப்பாலுக்குப் பதிலாகக் கொடுக்கவேண்டி நேரிடலாம்.

உங்கள் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கிறீர்கள் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கிறது என்றால், ஃபோர்மூலாவில் நீங்கள் மாற்றம் செய்யவேண்டியிருக்கும். உங்கள் குழந்தையின் மருத்துவருடன் நீங்கள் இதைக் குறித்துக் கலந்து பேச வேண்டும்.
சிலவேளைகளில், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி என்பனதொற்றுநோய்க்கு அறிகுறிகளாக இருக்கலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் இளம் சிசுக்களில் தொற்றுநோய் மிக விரைவில் கடுமையானதாகலாம். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் விரைவாக உடல் நீர் வறட்சி ஏற்படலாம். தொற்றுநோய் இருப்பதாகச் சந்தேகப்பட்டால் முடிந்தளவு கூடிய விரைவில் உங்கள் குழந்தைக்குச் சிகிச்சையளிக்கப்படவேண்டியது மிகவும் முக்கியம். விசேஷித்த நோய் கண்டுபிடிப்புச் சிகிச்சைகள் தேவைப்படலாம். உங்கள் குழந்தைக்கு மருத்துவமனையில் வைத்து, நரம்புகளினூடாக நீராகாரங்கள் உட்செலுத்தப்படவேண்டி நேரிடலாம்.

டயபரினால் ஏற்படும் அரிப்பு பற்றிய ஒரு குறிப்பு
வயிற்றுப்போக்கு, உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் புட்டத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். இது டயபர் அரிப்பை உண்டாக்கலாம்.

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு டயபர் அரிப்பு ஏற்பட்டால், அடிக்கடி டயபரை மாற்றவும். விசேஷமாக ஒவ்வொரு முறையும் அவன் மலங்கழித்தபின் அவ்வாறு செய்யவும். குழந்தைத் துடைப்பான்கள் உபயோகிப்பதை நிறுத்தவும். ஏனென்றால் வர்த்தக ரீதியாகத் தயாரிக்கப்பட்ட அனேக துடைப்பான்கள் அற்ககோலைக் கொண்டிருப்பதால் அவை எரிச்சலை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக உங்கள் குழந்தையின் புட்டத்தை ஒரு ஈரத் துணியால் துடைக்கவும். முடிந்தளவு அதிக “ டையப்பர் கட்டாத நேரத்தை“ உங்கள் குழந்தைக்கு கொடுக்க முயற்சிக்கவும். காற்று வெளியேற அனுமதிக்கவும். 

அடுத்த டயபரை அணிவிப்பதற்கு முன்பாக உங்கள் குழந்தையின் புட்டத்தில் டயபர் கிறீமை ஒரு தடித்த படலமாகப் பூசி விடவும். அவனது புட்டத்தில் பவுடர் போடும் ஆசையைத் தவிர்க்கவும். பேபிப் பவுடர்கள் பயனளிக்காமல் இருக்கும் மற்றும் உங்கள் குழந்தைக்கு சுவாசித்தலில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகு ஒரு ஈஸ்ட் தொற்றுநோய் அதாவது பிறப்புறுப்பில் தொடங்கி அடிவயிறு மற்றும் தொடைகள் வரை பரவும் விடாப்பிடியான அரிப்பு ஏற்பட்டால், முடிந்தளவு விரைவில் மருத்துவ உதவியை நாடவும். இந்த நிலைமைக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதற்காக ஒரு விசேஷித்த கிறீம் கிடைக்கும்.

Powered by Blogger.