எத்தகைய உணவை உண்பதன் மூலம் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்? ayul athikarikka sariyana unavu

எத்தகைய உணவை உண்பதன் மூலம் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்? என்ற தேடல் நம் அனைவரிடமும் உள்ளது.
இந்த நிலையில் வெளியாகும் ஆய்வுகள் பல அசைவ உணவை உண்பவர்களைவிட சைவ உணவை மட்டுமே உண்பவர்களுக்கு ஆயுட்காலம் அதிகம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
அதற்காக முன்வைக்கப்படும் காரணங்களில் சில இங்கே:
இருதய நோய் அபாயம் குறைவு
காய்கறிகள் நிறைந்த சைவ உணவு வகைகளில் வைட்டமின்கள் வளமாக இருக்கும்; கொழுப்புகள் குறைவாக இருக்கும். உடலுக்கு வேண்டிய இதர சத்துக்கள் அவற்றில் அதிகமாகவும் இருக்கும். காய்கறிகளில் சாச்சுரேட்டட்     (saturated) கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் (cholestrol) இல்லாததால் ரத்த அழுத்தம் சீரான நிலையல் இருக்கும். இதய நோய் வரும் வாய்ப்பும் குறைவு.
புற்றுநோய் அபாயம் குறைவு
காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் (anti- oxidants) , புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.
நீரிழிவு அபாயம் குறைவு
காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
எடையைப் பராமரிக்கலாம்
காய்கறிகளில் கொழுப்புகள் அதிக அளவில் இல்லாததால், உடலில் கொழுப்புகள் சேரும் வாய்ப்பு குறையும். இதன் மூலம் உடல் எடையை இன்னமும் சுலபமாகக் கட்டுப்படுத்தலாம்.