எந்த வயதினர் எவ்வளவு நேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்? evalavu neram thunka vendum

பல ஆரோக்கியம் குறித்த கட்டுரைகளில், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதிய அளவில் தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். சரி, போதிய அளவு தூக்கம் என்பது எவ்வளவு நேர தூக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படியே தெரிந்திருந்தால், அது 7-8 மணிநேரமாகத் தான் இருக்கும்.

ஆனால் தேசிய உறக்க நிதி நிறுவனம், எந்த வயதினர் எவ்வளவு நேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எந்த வயதில் எவ்வளவு நேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி வயதிற்கு ஏற்ற அளவு தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டு வந்தால், அவரது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கு எந்த வயதினர் எவ்வளவு நேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என தேசிய உறக்க நிதி நிறுவனம் பரிந்துரைப்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அந்த அளவு தூக்கத்தை மேற்கொள்ள முயற்சியுங்கள்.

0-3 மாதம்

குழந்தை பிறந்து 3 மாதம் வரைக்கும் ஒரு நாளைக்கு 14-17 மணிநேர தூக்கத்தை அக்குழந்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் மற்றும் அதுவே ஆரோக்கியமும் கூட. Show Thumbnail

4-11 மாதம்

குழந்தை பிறந்து 4-11 மாதம் வரைக்கும், அக்குழந்தைக்கு 12-15 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது.

1-2 வயது

1-2 வயதைக் கொண்ட குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு 11-14 மணிநேர தூக்கம் அவசியமானது. ஏனெனில் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவர்களின் தூக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

3-5 வயது

3-5 வயதுடைய குழந்தைகளுக்கு குறைந்தது 11-14 மணிநேர தூக்கம் கட்டாயம் தேவைப்படுகிறது. எனவே இந்த வயதுடைய உங்கள் குழந்தையை நன்கு தூங்க வையுங்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகள்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு குறைந்தது 6 மணிநேர தூக்கம் முதல் 13 மணிநேர தூக்கம் வரை மேற்கொள்ள வேண்டியது அவசியம்

14-17 வயது

பதின் வயதினரான 14-17 வயதைக் கொண்டவர்களுக்கு குறைந்தது 8-10 மணிநேர தூக்கம் அவசியம். ஆகவே இந்த வயது குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள், அவர்களை போதிய அளவு தூக்கத்தை மேற்கொள்ள வையுங்கள்.

18-25 வயது

18-25 வயதைச் சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு 7-9 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு தூங்க நேரம் கிடைக்காததால், அதனாலேயே பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். மேலும் 26-64 வயதைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த அளவு தூக்கம் இன்றியமையாதது ஆகும்.

65 வயதிற்கு மேல்

65 மற்றும் அதற்கும் மேலானவர்களுக்கு, ஒரு நாளைக்கு 7-8 மணிநேர தூக்கம் கட்டாயம் தேவை.

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு சிறு வயதில் இருந்தே போதிய அளவு தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள முடியும்.