ஐஸ் வாட்டரை விரும்பி குடிப்பவர்களா நீங்கள்?

ஐஸ் வாட்டரையோ அல்லது குளிர்பானத்தையோ உணவு உட்கொண்ட பிறகு விரும்பி குடிப்பவர்களா நீங்கள் என்றால் இது உங்களுக்கான பதிவுதான். இதை படித்தால் ஐஸ் வாட்டரை பயன்படுத்த யோசிப்பீங்க? இப்போதெல்லாம் கிராமத்திலும்,நகர்புறங்களிலும் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. இனி கோடை காலம் தொடங்கிவிட்டால் காலை முதல் இரவு வரை இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது. பீட்ஸா, பர்க்கர், kfc சிக்கன் போன்ற துரித உணவுகள் உட்கொண்ட பிறகு குளிர்பானம் குடிக்கும் பழக்கம் தற்போது நிறையபேரிடம் உள்ளது. இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மூளை, இதயம், சிறுநீரகம் பற்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் உருவாகிறது.உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பு கரையாமல், உடல் எடை கூடுவதற்கும் குளிர்ச்சியான தண்ணீர் தான் காரணமாகிறது. இதனால் தான் உடல் எடையை குறைக்க விரும்புவோர் உணவு உண்ட பிறகு வெந்நீர் மற்றும் கிரீன் டீ அருந்துகிறார்கள். ஜப்பானியர்கள் மற்றும் சீனர்களின் இளமையுடன், அதிக ஆயுள்காலத்துடன் இருப்பதற்கும் கிரீன் டீ தான் காரணமாகிறது. இதை நாமும் பின்பற்றி ஆரோக்கியத்துடன் இருப்போம்.