கருப்பா இருக்கும் சருமத்தை வெள்ளையாக்க சிம்பிள் டிப்ஸ்...! karupaka irukum sarumathai vellaiyakka

என்ன தான் சருமத்தை வெள்ளையாக்கலாம் என்று பல க்ரீம்கள் விற்கப்பட்டாலும், உண்மையில் சருமத்தை பால் போன்று வெள்ளையாக்க முடியாது. ஆனால் மாறாக சருமத்தை பொலிவோடு பராமரிக்கலாம். மேலும் வெயிலின் தாக்கத்தினால் கருமையான சருமத்தை நீக்கி, நமது உண்மையான நிறத்திற்கு கொண்டு வர முடியும்.

அதுமட்டுமின்றி, கருப்பாக இருந்தால் கவலைப்படாதீர்கள். ஏனெனில் கருப்பாக இருப்பவர்களின் சருமத்தில் உள்ள மெலனின், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்திருக்கும். இதனால் தான் கருப்பாக இருப்பவர்கள் அதிக அளவில் நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகாமல் இருக்கிறார்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவில், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான பாலில் கழுவி வந்தாலும், சருமம் பொலிவோடு இருக்கும்.

சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் தேன். அதற்கு தினமும் தேனை முகத்தில் தடவி உலர வைத்து, ஈரமான காட்டனால் துடைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

தயிரில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதுவும் சருமத்தின் நிறத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதற்கு 3 டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் உலர்ந்ததும் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் நல்ல பலனைக் காணலாம்.

1 தக்காளியை அரைத்து, அதனை ஈரமான சருமத்தில் தடவி உலர வைத்து, பின் மீண்டும் தடவி உலர வைத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறத்தில் மாற்றம் தெரிவதோடு, முகத்தில் வளரும் தேவையற்ற முடியையும் தவிர்க்கலாம்.