மது பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சித்தாமுட்டி. mathu palakkathai vida

மூலிகையின் பெயர் :– சித்தாமுட்டி.

தாவரப்பெயர் :– PAVONIA ZEYLANICA.

சித்தாமுட்டியின் மருத்துவப் பயன்கள் :- தாதுக்களின் எரிச்சலை தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும். பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்ப்பதற்குரிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது.

கர்பிணிப் பெண்ணுக்ககு மருத்துவ உணவாகப் பயன்படுகிது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக் குணப்படுத்ததும் மருந்ந்தாகப் பயன்படுகிறது.

சித்தாமுட்டி வேர் 10 கிராம் சிதைத்து 100 மி.லி. நீரில் போட்டு 25 மி.லி. யாகக் காய்ச்சி 2 சிட்டிகை திருகடுகு சூரணம் சேர்த்து காலை மாலை 3 நாள் கொள்ள வாதம், சுரம் தீரும்.

நவர அரிசியை சித்தாமுட்டி வேர் கசாயம் கலந்த பாலுடன் வேக வைத்து உடலெங்கும் தேய்த்து விடுதல் போன்ற சிகிச்சை முறைகள் மது பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவாகப் பயன்பட கருவுற்ற முதல் மாதம் பாலுடன் சித்தாமுட்டி மூலிகையைக் காய்ச்சி ஆற வைத்துக் கொடுப்பது உடலுக்கு நல்லது.