உடல் பருமனைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்து! – எச்சரிக்கை thoppaiyal apathu

உடல் பருமனாக இருப்பதைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், உடல்பருமனாக உள்ளவர்களை விட, இயல்பான உடல் எடையுடன் மாபெரும் தொப்பை கொண்ட மனிதர்களே விரைவில் மரணம் அடைவதாக தெரியவந்துள்ளது.
அதிலும், இதுபோன்ற தொப்பையுள்ள பெண்கள் ஆண்களைக் காட்டிலும் முப்பத்து இரண்டு சதவிகிதம் அதிகமாக மரணம் அடைவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆகவே, உடல் எடை குறைப்பது தொடர்பாக பேசுவதை தவிர்த்து விட்டு, தொப்பையை குறைப்பது பற்றி முடிவுசெய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முறையான உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சரியான உணவை எடுத்துக்கொண்டால், இடுப்பில் உள்ள கொழுப்பு தானாகவே குறையும் என இந்த ஆராய்ச்சி குழுவில் உள்ள பால் போய்ரீர் குறிப்பிட்டுள்ளார்.