உடற்பருமனை குறைக்க Dr.க.சிவசுகந்தன் இன் நீங்கள் செய்யவேண்டியவை சில தகவல்கள்.edaiyai kuraikka eliya vazi

நீங்கள் உங்கள் நிறையில் 10% ஐ குறைத்தால்…
 • உங்கள் குருதியமுக்கம்10 mm Hg இனால் குறையும்
 • உங்கள் கொலஸ்ட்ரோல் 10-15% வரை குறையும்
 • நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 50% இனால் குறையும்.
 • நீரிழிவு நோயாளர்களாயின் குருதியில் வெல்லத்தின் அளவு குறையும்
உடல் பருமனை குறைக்க எண்னென்ன வழிகளுண்டு?
 •  உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல்
 • உடற்பயிற்சி செய்தல்
 • நிறையை பேணுவதற்கு மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தல்.
 • மருந்துகளை பாவித்தல்
 •  சத்திரசிகிச்சை செய்தல்
உணவு கட்டுப்பாட்டு முறைகள் எவை?
 • அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிருங்கள்
 •  ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது குறைந்தளவு உணவையே உள்ளெடுங்கள்
 • பிரதான சாப்பாட்டு வேளை களுக்கிடையில் நொறுக்கு தீனி உண்பதை தவிருங்கள்
 • தேவையான சத்துகளற்ற வெறும் சக்தி அடங்கிய உணவுகளை உள்ளெடுப்பதை தவிருங்கள் மென்பானங்கள், இனிப்புகள்)
 • நார்ச்சத்துள்ள உணவுகளை உள் ளெடுப்பதை கூட்டுங்கள்.
 • உணவை சாப்பிடாமலிருப்பது பின் அதிகளவு உணவை சாப்பிடுவது போன்றவற்றை தவிருங்கள்.
நான் எவ்வாறான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?
 • குறைந்தது 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஒரு வாரத்துக்கு 5 முறையாவது செய்ய வேண்டும்.
 • இவ் உடற்பயிற்சிகள் அவரவர் வயதுக்கும் உடல்நிலைமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
சாதாரணமாக உடற்பயிற்சிக்கு எவ் வளவு சக்தி விரயமாகிறது?
 • இருத்தல், எழுதுதல், type செய்தல் 120-130 கிலோ கலோரி (kcal/hr)
 • உடை கழுவுதல், மெதுவாக நடத்தல், வீட்டுத்தோட்டம் செய்தல் 150-3ookcal/hr
 • சற்று வேகமாக நடத்தல், நடனமாடல் 60 300-400 kcal/hr
 • துள்ளுதல், நீந்துதல். tennis விளையாடுதல், சைக்கிள் ஓடுதல், மிக வேகமான நடை- 400-600
kcal/hr எவ்வாறு 1ookcal ஐ உள்ளெடுத்து அதை விரயமாக்குவது?
பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 1oo kcal உள்ளெடுக்கப்படும்
 • 3/4 கப்சோறு, 11/2 துண்டு பாண்.1கப் பால், 2 சிறிய வாழைப்பழம், 3 கரண்டி சீனி
பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 1oo kcal விரயமாகும்.
 •  25 நிமிடவேகநடை , 15நிமிடதுள்ளல்,  15நிமிட சைக்கிளோட்டம்,  15 நிமிடம் டெனிஸ் விளையாட்டு
உடல் நிறையை குறைக்க ஏதேனும் மருந்து களை பாவிக்கலாமா?
ஆம் பாவிக்கலாம்.
மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு உடல்நிறைகுறையா விடின் மட்டுமே பாவிக்கப்படும்.
 • சதையி இனால் சுரக்கப்படும் நொதியங்களின் தொழிற்பாட்டை எதிர்த்தல்
 •  உடலின் இயக்கத்தை கூட்டும் மருந்துகள்
 • பசியை குறைக்கும் மருந்துகள்
இதற்கு சத்திரசிகிச்சை உண்டா?
ஆம்.
 • இடைச்சிறுகுடலையும் பின் சிறுகுடலையும் குறுக்காக இணைத்து சக்தியை அகத்துறிஞ் சும் மேற்பரப்பை குறைத்தல்
 • இரைப்பையின் அளவை சிறிதாக்கல் மூலம் உணவு சேமிக்கும் அளவை குறைத்தல் இதனால் கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிரம்பிவிடும்.