குழந்தைகளின் குறட்டையினால் இத்தனை ஆபத்துக்கள் இருக்கின்றதா? kuzanthai nalam

குறட்டை என்பது பொதுவாக நம்மை சுற்றியிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடியது என்ற விடயம் மட்டுமே பலருக்கு தெரியும்.
ஆனால் இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுகின்றனது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அதிலும் குழந்தைகள் குறட்டை செய்தால் பிரதானமாக அவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிப்படைகின்றது என சுவீடனின் Gothenburg பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.;
11 வயதுக்குட்பட்ட சுமார் 1,300 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அவர்கள் வாரத்திற்கு அதிகமான அளவில் குறட்டை விடுகின்றனர்.
இது தவிர தொடர்ச்சியாக குறட்டை செய்யும் குழந்தைகள் பகலில் களைப்படைந்தவர்கள் போல இருப்பதாகவும், அவதானிக்கும் திறன் குறைந்தவர்களாகவும், படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களாகவும், வளர்ச்சியில் மந்த நிலை உடையவர்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.