மாரடைப்பைத் தவிர்க்க தேநீர் அருந்துங்கள். maradaippai thavirka theneer

தினமும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவடையும் என ஆய்வொன்றின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பை ஏற்படுத்தும் கல்சியம் இரத்தக் குழாய்களில் தங்குவதை தேநீர் கட்டுப்படுத்துவதால், தேநீர் அருந்தாதவர்களைவிட தினமும் தேநீர் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 35 சதவீதம் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.