சிகப்பு உணவுகள் பற்றி அறியாத உண்மைகள் !!! tamilhealth

சிவப்பு உணவுகளினால் நீரிழவு, இரத்த அழுத்தம், இவற்றின் காரணங்களால் ஏற்படும் மற்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படாமல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

1.தினமும் ஒரு ஆப்பிள் மருத்துவரிடம் செல்லாமல் இருக்க உதவும் என்பார்கள். இதில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ஃபிளாவனாய்டுகள், நார்ச்சத்து போன்றவை நீரிழிவு, நுரையீரல், பெருங்குடல், மார்பக, கல்லீரல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் பயனளிக்கிறது.

2.தக்காளியில் வைட்டமின் சி, ஈ, கே, எ சத்துக்களும், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம் போன்றவை உயர்ரக அளவில் கிடைக்கிறது. தக்காளி சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள, இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

3.மாதுளை இதில் அதிகளவில் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. மேலும் மாதுளையில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய நோயை எதிர்த்து போராடும் தன்மையுள்ளவை. ஆண்மை குறைபாடு உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போன்றவர்கள் மாதுளையை உட்கொள்வதால் சிறந்த தீர்வுக் காண முடியும்.

4.பன்னீர் திராட்சை பன்னீர் திராட்சையில் ஃபோலேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபிளாவனாய்டுகள் போன்றவை இருக்கின்றன. இது சரும பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும் உணவாகும்.

5.செர்ரி செர்ரியில் அந்தொசியனின் (anthocyanin) எனும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளது. இது கீல்வாதம், நீரிழிவு புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து போராட நன்கு உதவுகிறது. செர்ரிகளில் பொட்டாசியம், வைட்டமின் எ, நார்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன.

6.தர்பூசணி உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க உதவும் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்று. வைட்டமின் எ, பி 6, சி மற்றும் அமினோ அமிலம் சத்து போன்றவை இதில் அதிகம். தர்பூசணியில் இருக்கும் லைகோபீன் எனும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

7.பீட்ரூட் ஒருநாளுக்கு தேவையான ஃபோலேட் சத்தை முழுவதும் பீட்ரூட் தருகிறது. இதில் புதிய செல்களை உருவாக்க தேவையான வைட்டமின் பி சத்தும் இருக்கிறது. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளது பீட்ரூட்.

8.சிவப்பு மிளகாய் சிவப்பு மிளகாயில் கேப்சாய்சின் எனும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது, இது இரத்த நாளங்களை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இது பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

9.ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஃபோலேட் / ஃபோலிக் அமிலம் பெண்களின் இதயத்திற்கு நலன் சேர்க்கிறது.

10.குருதிநெல்லி (Cranberry) இதில் அல்சரை உண்டாகும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உள்ளது. மேலும், இந்த குருதிநெல்லி சிறுநீர் குழாய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.