உடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் நகத்தில் தெரியும். udalil erpadum noykalin arikurikal nagathil theriyum

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால், அகத்தின் அழகு நகத்திலும் தெரியும். காரணம், உடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் அவற்றை நகம் மிகத்தெளிவாக காட்டி விடுகின்றன.
images (2)
நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்களாக வளர்கின்றன.
ஆனால், அது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்புகள் ஆகின்றன. கெரட்டின் என்னும் உடல் கழிவுதான் நகமாக வளர்கிறது.
images
இந்த நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே, நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.
நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் மானிட்டர் போலவே செயல்படும்.
maruthani3
இதையடுத்து, நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.
பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
ஆனால், நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளை பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.
5159085_orig
குறிப்பாக, ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும். சிறுநீரகம் செயலிழப்பு எற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.
மஞ்சள் காமாலை பாதிப்பால் நகம் மஞ்சள் நிறத்திலும், இதயத்தில் ஓட்டை ஏற்பட்டால் நகங்கள் நீல நிறத்திலும், இரத்த சோகை இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாகவும் இருக்கும்.
Make-your-manicure-last-longer
குழிபறிப்பது, பழங்களில் தோல் உரிப்பது, பொருட்களை சுரண்டுவது ஆகியவற்றிற்கு நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், நோய் தொற்று ஏற்படவும் காரணமாக அமைந்துவிடும். ரசாயணங்கள் சேர்ந்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இயற்கையான மருதாணியை வேண்டுமென்றால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.