வழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம். vazukai thaiyil mudi vazara eliya iyarkai maruthuvam

வழுக்கை தலையில் முடி வளருமா..?? வளரும் என்கிறது இயற்க்கை மருத்துவம், மருந்தையும் நமது வீட்டிலேயே தயாரித்து தலையில் தடவலாம்..
தேவையான மூலிகைகள்: மாதுளை முத்துக்கள் (pome granate Juice), சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம் ), சிறிய துணி ...

குறிப்பு: அப்பளை செய்வதற்கு முன்பு வழுக்கை விழுந்த இடத்தை ரேசர் கொண்டு முடிகளை அகற்ற வேண்டும். மேல் தோலில் உள்ள இறந்து போன செல்களை அகற்ற வேண்டும் அப்பொழுது தான் சாறு வேர்கால் வழியாக உள்ளே இறங்கும். (அதற்காக ரத்தம் வரும் வரை தோலை வழிக்காதிங்க..)

மாதுளை மற்றும் வெங்காய சாற்றை சொட்டை தலை மேல் அப்பளை பண்ணும் பொழுது முடி வேர் துளை வழியாக ஜூஸ் இறங்க வேண்டும் .

மாதுளை முத்துக்களை மெல்லிய துணியில் இருக்க கட்டிக்கொள்ள வேண்டும் . பிறகு கட்டிய மாதுளையை மெதுவாக நசுக்க வேண்டும் .

அதன் பிறகு அதை வழுக்கை விழுந்த இடத்தில தேய்க்க வேண்டும் . மூன்று நாள், ஐந்து நாள் அல்லது பத்து நாட்கள் கூட தொடர்ந்து தேய்க்கலாம் .

தொடர்ந்து ஐந்து அல்லது பத்து நாட்கள் மாதுளை தேய்த்து வந்த கடைசி நாளுக்கு பிறகு சின்ன வெங்காயம் அப்ளை 

செய்ய வேண்டும், இதனையும் ஐந்து அல்லது பத்து நாட்கள் அப்பளை செய்யலாம்.

இதை செய்துமுடித்த பிறகு ஒரு நல்ல மூலிகை தைலம் கொண்டு தலையில் தேய்க்க வேண்டும், மூலிகை தைலம் கிடைக்கவில்லை என்றால் சுத்தமான தேங்காய் என்னை கொண்டு தேய்க்கலாம் . இப்படி தேய்த்தால் முடி நன்றாக கரு கருவென வளருமென சொல்கிறார் Dr.சத்யவானி.