இரவில் தாமதமாக உணவு உண்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம்! iravil thamathamaka unavu sapidal erpadum vilaivukal

வாழ்க்கை நன்றாக வாழ்வதற்கே என்கிற எண்ணம் இளைய தலைமுறையினரிடம் வெகு வேகமாக பரவி வருகின்றது. இந்த வாழ்க்கை நம்முடையது தான் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், அதை கொண்டாடி கொண்டாடி போட்டு உடைக்கப் போகின்றோமோ என்கிற சந்தேகம் வயதில் மூத்தவர்களிடம் காணப்படுகின்றது. ஏனெனில் பெரியவர்களின் பேச்சை தற்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் சிறிதளவும் கேட்பதில்லை.
அதிலும் உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் மிகவும் எளிதாக புறந்தள்ளி ஒரு வரைமுறைக்கும் உட்படாமல், நாம் விரும்புகின்ற நேரத்தில் விரும்புகின்ற உணவு உட்கொண்டு விடுகின்றோம். நாம் அனைவரும் இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதைப் பற்றிய பழைங் கதைகளை கேள்விப்பட்டிருப்போம். அக்கதைகள் இரவு 8 மணிக்கு மேல் கட்டாயம் உணவு உட்கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கின்றது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது நமது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
இரவு நேர உணவுப் பழக்கம் பல லட்சக்கணக்கான மக்களுக்கு பெரும் பிரச்சனையாக விளங்குகின்றது. அவர்கள் படுக்கைக்குப் போகும் முன் உள்ளே தள்ளும், அளவுக்கு அதிகமான உணவானது, அவர்களின் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகின்றது. இரவு உணவு நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட நபர்கள், இரவு நேரம் முழுவதும் அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுகின்றார்கள்.
இந்த நோய் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு உணவிற்குப் பின் மேலும் அதிகமாக உணவை உட்கொள்ளுகின்றார்கள். இவர்கள் பகல் நேரத்தில் மிகக் குறைவாகவும், இரவு நேரத்தில் மிக அதிகமாகவும் உணவை உட்கொள்ளுகின்றார்கள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் நிம்மதியாகக் கூட தூங்க முடியாது. ஏனெனில் அவர்கள் தூக்கத்தில் கூட உணவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் வெறுப்புடனும், குற்ற உணர்ச்சியுடனும் காணப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் உணவு உட்கொள்ளும் பொழுதே அடுத்த வேளை உணவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி, அதைப் பற்றி பயப்படத் தொடங்கி விடுவார்கள். ஒரு ஆராய்ச்சி பத்திரிக்கை மிக சமீபத்தில் இரவு உணவுக் குறி நோயை, குறைந்த அளவு மெலடோனின், அதிக அளவு கார்டிசோல் போன்றவற்றுடன் சம்பந்தப்படுத்தி கட்டுரை வெளியிட்டது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் பிற உணவு சம்பந்தப்பட்ட நோய்கள், தூக்கக் கோளாறுகள் மற்றும் மனநிலை கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
மேற்கூறிய அனைத்தும் உங்களைப் பாதிக்காமல் இருக்க, 3 மணி இடைவெளியில் உணவை உட்கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக, இரவு நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கம் உடையவர்கள், உங்களுடைய இரவு உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மாலை 6 மணிக்கு இரவு உணவை முடித்துவிட்டாலும், படுக்கைக்குச் நள்ளிரவு தான் செல்கின்றீர்கள் எனில் உங்களூடைய உணவிற்கும், படுக்கைக்கும் இடையே நீண்ட நேர இடைவெளி உள்ளது. அந்த நீண்ட இடைவெளி உங்களை அதிக உணவை உட்கொள்ளச் சொல்லி தூண்டும்.
இரவு உணவுக் குறி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், கிட்டத்தட்ட அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கின்றார்கள். இத்தகைய உணவுகள் உங்களுடைய மூளையானது அதிக அளவிலான செரடோனினை வெளிவிட தூண்டுகின்றது. செரடோனின் உங்களூக்கு ஆழ்ந்த உறக்கத்தை தரும். இது குறிப்பாக தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆவலை தூண்டுவதாக இருக்கிறது. அவர்களுக்கு உணவைப் பற்றிய தவறான புரிதல் இருக்கின்றது. அவர்கள் கடைக்குச் சென்று சத்தான உணவுளை வாங்குவதைத் தவிர்த்து, எளிதாக கிடைக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள தொடங்கிவிடுகின்றார்கள்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பலரும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கின்றார்கள். அது அவர்களின் ஆற்றலை அளவுக்கு அதிகமாக உறிஞ்சிவிடுகின்றது என நினைக்கின்றார்கள். நீங்கள் உங்களுடைய நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால், உங்களுடைய உடற்பயிற்சியானது பசியை ஒடுக்கி உங்களுக்கு ஒரு நல்ல இரவுத் தூக்கத்தையும் தரும். இது உங்களுடைய இரவு உணவுக் குறி நோயை கட்டுப்படுத்த உதவும். உங்களுடைய உடலானது உணவைப் பற்றி நினைப்பதை மறக்கடிக்க பல்வேறு வழிகள் உள்ளன.
நீங்கள் சிற்றுண்டி எடுத்துக் கொள்ளும் பொழுது நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு சிலருக்கோ சாப்பிடத் தோன்றும் பொழுது பல் துலக்குவது பசியை மறக்கச் செய்யும். எனவே, மிதமிஞ்சி உண்ணுதல் நோயை நீங்கள் எவ்வாறு சமாளிக்கின்றீர்கள் என்பதைப் பற்றிய உங்களுடைய நினைவுகள் மற்றும் கருத்துக்களை கீழே உள்ள கருத்து பெட்டியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.