தீராத கழுத்து வலிக்கு,KALUTHU VALI MARUTHUVAM

Kluthu vali elithil kunamaka sirantha vazikal. best tamil health tps.patti vaithiyam tamilசிறு, சிறு விஷயங்களில் நீங்கள் அக்கறை எடுத்துக் கொண்டாலே போதும், இந்த கழுத்து, முதுகு, இடுப்பு வலியில் இருந்து நீங்கள் நிரந்தர தீர்வுக் காண முடியும். அன்றாக வாழ்வில் கலந்திருக்கும் மொபைலில் துவங்கி, நீங்கள் உறங்க செல்லும் தருணம் வரை சிலவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு முழு தீர்வுக் காண ஊட்டச்சத்தும் அவசியம்.
மொபைல்(Tamil Maruthuvam)
அதிக நேரம் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பதை முதலில் நிறுத்துங்கள். அதிலும், சிலர் படுக்கைக்கு சென்றுவிட்டாலும், ஒருபுறமாக மொபைல் வைத்தப்படியே நோண்டிக் கொண்டிருப்பார்கள். இதனால், கழுத்து வலி மட்டுமின்றி, உடல் அசதி, தூக்கமின்மை, சுறுசுறுப்பு குறைவு போன்றவையும் கூட உண்டாகும்.
உடற்பயிற்சி(tamil health tips)
முடிந்த வரை தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். எலும்புகளின் வலிமையை ஊக்குவிப்பது போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.
வேலை(paati vaithiyam)
தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்து வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஐந்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டும் வேலை செய்ய துவங்குங்கள்.
அமரும் நிலை ( Azaku kuripu)
இன்று கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யும் பலரும் செய்யும் தவறு. சாய்வாக, சரியான நிலையில் அமராமல் வேலை செய்வது தான், முதலில் நேராக அமர்ந்து வேலை செய்யுங்கள். இதை பின்பற்றினாலே முதுகு வலி, கழுத்து வலி அதிகம் ஏற்படாமல் தப்பிக்கலாம்.
யோகா (இயற்கை மருத்துவம்)
யோகா செய்வது உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் மிகவும் நல்லது. இடுப்பு, முதுகு, கழுத்து வலியில் இருந்து தீர்வுக் காண யோகா ஒரு சிறந்த நிவாரணி.
உணவுகள் (பாட்டி வைத்தியம்)
எலும்புகளுக்கு வலுவளிக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக கால்சியம் மற்றும் காய்கறிகள் அதிகமாக உட்கொள்ளுங்கள். காய்கறிகளை வேகவைத்து உண்பது மிகவும் சிறந்தது.